1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : திங்கள், 13 ஜனவரி 2020 (16:02 IST)

அரசியல்வாதிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - எஸ்.ஏ. சந்திரசேகர் !

காஞ்சிபுரம் மாவட்டம் விஜய் மன்ற அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட எஸ்.ஏ. சந்திரசேகர், மக்கள் விழிப்புணர்ச்சி பெற்று வருவதால் அரசியல்வாதிகள் ஜயாக இருக்க வேண்டும் என அவர் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :
 
தற்போது மக்களிடம் அதிக  விழிப்புணர்ச்சிகள் ஏற்பட்டுவருகிறது. எனவே அரசியலை வியாபாரமாக செய்ய வேண்டாம் என தெரிவித்தார். 
 
அரசியலில் பணம் கொடுத்தால் வெற்றி பெறலாம் என எண்ணம் மாறி வருகிறது. அதனால் அரசியல்வாதிகள் மக்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அத்துடன், நல்லது செய்தால்தான் வெற்றியடைய முடியும் என கூறினார்.