எஸ்.ஐ. வில்சன் துப்பாக்கிசூடு; திட்டமிட்டக் கொலை என கேரள போலிஸ் அறிவிப்பு !

Last Modified திங்கள், 13 ஜனவரி 2020 (15:08 IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த எஸ்.ஐ. வில்சனின் கொலை சம்பவம் திட்டமிடப்பட்டது என கேரள போலிஸ் அறிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் பணியற்றிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன், சோதனையின் போது இரு நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். தலைமறைவானக் குற்றவாளிகளை தமிழக், கேரள போலிஸார் தேடி வருகின்றனர்.

கொலை குற்றவாளிகளென சந்தேகிக்கப்படும் இருவரான அப்துல் சமீம், தவ்ஃபீக் ஆகிய இரண்டு பேரின் புகைப்படத்தை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.  அவர்களைப் பற்றி தகவல்  தெரிவித்தால், 7 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதற்காக 70103 63173 என்ற வாட்ஸ் ஆப் எண் 24 மணி நேரமும் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கேரளப் போலிஸார் இந்த கொலை திட்டமிட்டு செய்யப்பட்ட ஒன்று என சந்தேகித்துள்ளனர். கொலை நடந்த இடத்துக்கு அருகில் கொலைக்கு ஒரு மணிநேரத்துக்கு முன்னதாக இருவரும் சுற்றியது சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. அதேப் பகுதிக்கு இருவரும் வந்ததும் அங்குள்ள பள்ளி வாசலுக்கு சென்றதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


 இதில் மேலும் படிக்கவும் :