போலீஸ் ஸ்டேசனில் கைதிகள் பலி.... தமிழகம் 2 ஆம் இடம்!

accuist
sinoj kiyan| Last Updated: திங்கள், 13 ஜனவரி 2020 (13:56 IST)
போலீஸ் ஸ்டேசனில் கைதிகள் இறப்பதில் இந்திய அளவில் தமிழகம் இரண்டாம் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகிறது.
தேசிய குற்றப்பிரிவு ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீஸார் காவல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லுவர். அப்படி அழைத்துச் செல்லப்படும் விசாரணைக் கைதிகளின் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகிறது.
 
இந்நிலையில், போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டவர்களில் அதிக இறந்ததவர்களில் குஜராத் முதலிடம் வகிக்கிறது கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் குஜராத் மாநிலத்தில் 13 பேர் போலீஸ் ஸ்டேசனிலேயே உயிரிழந்துள்ளனர். விசாரணைக் கைதிகளின் தரப்பில் போலீஸாரின் சித்ரவதையினால்தான் அவர்கள் இறந்ததாக கைதிகள் தெரிவித்துள்ளனர்.
 
அதேபோல் போலீஸ் ஸ்டேசனில் விசாரணைக் கைதிகள் உயிரிழப்பில் தமிழகம் இரண்டாவது இடம் பிடித்துள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில் 12 விசாரணைக் கைதிகள் உயிரிழந்துள்ளனர்.
 
மேலும், இது சம்பந்தமாக நீதிமன்ற விசாரணையில் விசாரணைக் கைதிகள் எதிர்பாராத விதமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :