வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 8 ஏப்ரல் 2024 (12:47 IST)

சென்னை திநகரில் நாளை மோடியின் ரோடு ஷோ.. நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி

சென்னை தியாகராயர் நகரில் நாளை பிரதமர் மோடியின் ரோடு ஷோவுக்கு காவல்துறை பல நிபந்தனைகள் விதித்து அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை தியாகராயர் நகரில் நாளை பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் தொண்டர்கள் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது, பேனர் மற்றும் அலங்கார வளைவுகள் அமைக்க கூடாது  என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் முழக்கங்களை எழுப்பக் கூடாது. எந்த பதாகைகளையும் ஏந்திச் செல்லக் கூடாது என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் காவல்துறையின் நிபந்தனைகளை மீறினால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாளை மாலை 6 மணிக்கு தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து தியாகராய நகரில் ‘ரோடு ஷோ’ மூலம் மோடி பிரச்சாரம் செய்யவுள்ளார். திநகரில் உள்ள பனகல் பூங்கா முதல் தேனாம்பேட்டை சிக்னல் வரையிலான பாண்டி பஜார் சாலையில் சுமார் 2 கி.மீ தூரத்துக்கு ‘ரோடு ஷோ’ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Edited by Mahendran