1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Police preparations for TASMAC opening tomorrow

டாஸ்மாக் கடைகளில் என்னென்ன பாதுகாப்பு...?

கொரோனா
நாளை டாஸ்மாக் திறக்கப்பட உள்ளதால் காவல்துறை தரப்பில் மேற்கொள்ளாப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. கடந்த 40 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கினால் நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டதால் மது பிரியர்கள் மது கிடைக்காமல் திண்டாடி வந்தனர்.  
 
இந்நிலையில் தற்போது ஆந்திரா, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் மதுக்கடைகள் முன்பு மது பிரியர்கள் கூட்டமாய் குவிவதால் சமூக இடைவெளியை பேணுவதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. 
 
இந்நிலையில் தமிழத்திலும் சென்னை தவிர பிற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதோடு அரசு மாதுபானங்களின் விலையை ரூ.20 உயர்த்தியுள்ளது. சாதாரண 180 மிலி மதுபானங்கள் அடக்க விலையோடு ரூ.10 அதிகமாகவும், நடுத்தர மற்றும் ப்ரீமியம் பானங்கள் ரூ.20 அதிகமாகவும் விற்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
 
காவல்துறை தரப்பில் இது குறித்து மேற்கொள்ளாப்பட்டுள்ள நடவடிக்கைகள் பின்வருமாறு, ஒவ்வொரு கடைக்கும் தலா 2 காவலர்கள், 2 ஊர்க்காவல் படையினர், 1 தன்னார்வலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 
 
ஒவ்வொருவருக்கும் இடையே 6 அடி இடைவெளியை உறுதி செய்ய வேண்டும். கூட்டத்தைப் பொறுத்து 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு தர வேண்டும். கடைக்கு அரை கி.மீ.க்கு முன்பாகவே மதுப்பிரியர்களின் வாகனங்களை நிறுத்தி விட்டு வரிசைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
 
அதிக கூட்டம் கூடும் மதுக்கடைகளில் ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் கண்காணிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. 
About Writer
Sugapriya Prakash