கோலி செய்த வேலையால் அலறி துடித்த ரசிகர்கள்! வைரலான RIP Bruno!

Bruno Mars
Prasanth Karthick| Last Modified புதன், 6 மே 2020 (15:22 IST)
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் நாய் இறந்ததற்காக பகிரப்பட்ட ஹேஷ்டேக் பிரபல பாடகர் மரணமடைந்து விட்டதாக தவறாக புரிந்து கொள்ளபட்டதால் பரபரப்பு எழுந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. இவர் தான் வளர்த்த நாய்க்கு ப்ரூனோ என பெயர் வைத்திருந்தார். கோலியின் மிகவும் செல்ல நாயான ப்ருனோ உயிரிழந்துவிட்டது. இதனால் மன வருத்தம் அடைந்த கோலி, ப்ருனோவுடன் தான் இருந்த படங்களை ட்விட்டரில் பதிவிட்டு இரங்கல் தெரிவித்திருந்தார். கோலியின் வருத்தத்தில் பங்கு கொள்ள நினைத்த அவரது ரசிகர்கள் இணையத்தில் RIP Bruno என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்துள்ளனர்.

இந்த ஹேஷ்டேகை கண்ட வெளிநாட்டினர் உடனடியாக ஹார்ட் அட்டாக்கே வந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பிரபலமான லத்தீன் அமெரிக்க பாடகர் பெயர் ப்ரூனோ மார்ஸ். அவரது பாடல்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. இந்த ஹேஷ்டேகை பார்த்ததும் பாடகர் ப்ரூனோ மார்ஸ் இறந்துவிட்டதாக எண்ணி பதறி சென்று உள்ளே பார்த்தவர்கள் அது கோலியின் நாய் என தெரிந்ததும் நிம்மதி அடைந்துள்ளனர். இதுகுறித்து பல வெளிநாட்டினர் “இந்தியர்கள் எங்களுக்கு ஹார்ட் அட்டாக் வர வைத்து விட்டனர்” என நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :