தொடர்புடைய செய்திகள்
- இரட்டை இலை சின்னத்தில் தான் நிச்சயம் போட்டியிடுவோம்! மீண்டும் உறுதி செய்த ஓபிஎஸ்
- பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.. எடப்பாடி பழனிசாமியை மிரட்டியதா பாஜக?
- பாஜக கூட்டணியில் அமமுக-ஓபிஎஸ்-க்கு எத்தனை தொகுதிகள்? விடிய விடிய பேச்சுவார்த்தை..!
- மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியில் சமரசம்.. ஷிண்டேவின் சிவசேனாவுக்கு எத்தனை தொகுதி?
- தாய்மார்களுக்கு ரூ.1000 பிச்சை போட்டால் வாக்களிப்பார்களா?- குஷ்பு கேள்வி
பாஜக கூட்டணியில் பாமக.. பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாக தகவல்.. எத்தனை தொகுதிகள்?
பாஜக கூட்டணியில் பாமக இணைவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் இறுதி கட்ட பேச்சு வார்த்தை முடிவடைந்து பாமகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்த முடிவும் எட்டப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
பாஜக கூட்டணியில் ஏற்கனவே தமிழ் மாநில காங்கிரஸ் உட்பட சில கட்சிகள் இணைந்து உள்ள நிலையில் அடுத்த கட்டமாக பாமக மற்றும் தேமுதிக ஆகிய இரு கட்சிகளிடமும் பாஜக பேச்சுவார்த்தை நடைபெறும் நடத்தி வந்தது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் விறுவிறுப்பாக பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்த பாமக திடீரென பாஜக கூட்டணியில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பாஜக கூட்டணியில் இணையும் பாமகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட இருப்பதாகவும் ஒரு ராஜ்யசபா தொகுதியும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பாமக பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் அடுத்த கட்டமாக தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அனேகமாக பாமகவுக்கு கொடுக்கும் தொகுதிகள் தேமுதிகவுக்கும் கொடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பாமக மற்றும் தேமுதிக ஆகிய இரண்டு கட்சிகளும் பாஜக கூட்டணிக்கு வந்துவிட்டால் அந்த கூட்டணி வலுவான நிலையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
Edited by Mahendran
