வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 12 மார்ச் 2024 (12:03 IST)

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியில் சமரசம்.. ஷிண்டேவின் சிவசேனாவுக்கு எத்தனை தொகுதி?

eknath shinde
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணியில் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை இழுபறியில் இருந்த நிலையில் தற்போது சமாதான பேச்சுவார்த்தை நல்லபடியாக முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தை பொருத்தவரை ஷிண்டேவின் சிவசேனா ஏற்கனவே 13 எம்பிகள் வைத்துள்ள நிலையில் 15 எம்பி தொகுதிகள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில் 10 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என பாஜக தரப்பில் கூறியதாக செய்திகள் வெளியானது.
இதனை அடுத்து பேச்சுவார்த்தை இழுபறியில் இருந்த நிலையில் தற்போது 13 தொகுதிகள்  கொடுக்க பாஜக ஒப்பு கொண்டதாக தெரிகிறது. மேலும் அஜித் பவார் தலைமையில் ஆன தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது

மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 48 தொகுதிகள் இருக்கும் நிலையில் பாஜக 25 தொகுதிகளில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Edited by Mahendran