1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 13 மார்ச் 2024 (08:10 IST)

பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.. எடப்பாடி பழனிசாமியை மிரட்டியதா பாஜக?

modi amithsha
பாஜகவுடன் கூட்டணியில் இணையாவிட்டால் எடப்பாடி பழனிச்சாமி பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தமிழக பாஜக பிரமுகர் ஒருவர் மிரட்டியதாக கூறப்படுவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக இன்னும் அதிமுகவுக்கு கூட்டணிக்கான கதவை திறந்து வைத்திருக்கும் நிலையில் பாஜகவுடன் எந்த சந்தர்ப்பத்திலும் கூட்டணி இல்லை என்பதில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக உள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் சென்னை வந்த பாஜக பிரபலம் ஒருவர் அதிமுகவின் முக்கிய தலைவரை ரகசியமாக நட்சத்திர ஓட்டலில் சந்தித்து, எப்படியாவது பாஜக கூட்டணிக்கு எடப்பாடி பழனிச்சாமியை சம்மதிக்க சொல்லுங்கள், அப்படி இல்லை என்றால் முக்கிய அதிமுக தலைவர்களாவது பாஜகவில் இணைய வேண்டும், இந்த இரண்டும் நடைபெறவில்லை என்றால் பின் விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த அதிமுக தலைவர் அச்சத்துடனே வீடு சென்றதாகவும் அவர் எடப்பாடி பழனிசாமி இடம் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் சிறுபான்மையினர் நம்பிக்கையை பெற வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Edited by Siva