தொடர்புடைய செய்திகள்
- இந்த முறை இலவச அறிவிப்பு உண்டா? – திமுகவின் தேர்தல் அறிக்கை விரைவில்..!
- பாமக கேட்கும் 23 தொகுதிகள் இவை தான்: அப்படியே கொடுக்குமா அதிமுக?
- பாமகவுக்கு ஒரு மரியாதை எங்களுக்கு ஒரு மரியாதை: தேமுதிக அதிருப்தி!
- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு !
- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 24 தொகுதிகள் ஒதுக்கீடு??
இன்று பாமக தேர்தல் அறிக்கை: என்னென்ன திட்டங்கள் இருக்கும்?
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி முதல் கட்சியாக அந்த கூட்டணியில் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடித்து 23 தொகுதிகளைப் பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கூட்டணிகளிலும் இன்னும் எந்த பெரிய கட்சியும் கூட்டணி தொகுதி உடன்பாடு முடியாத நிலையில் பாமக மட்டும் தொகுதி உடன்பாடுகளை முடித்துவிட்டு தற்போது அடுத்த கட்டமாக தேர்தல் அறிக்கையை வெளியிடும் பணியை தொடங்க உள்ளது
பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தேர்தல் அறிக்கையை வெளியிடுவார் என்று செய்திகள் வெளியாகிஉள்ளது. இந்த அறிக்கையில் என்னென்ன புதிய திட்டங்கள் இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
