செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 5 மார்ச் 2021 (08:19 IST)

அயோத்தி கோவில்: அக்கம் பக்கம் நிலங்களை விலைக்கு வாங்கும் அறக்கட்டளை !

அயோத்தி கோவிலின் பரப்பளவை 70 ஏக்கரில் இருந்து 107 ஏக்கராக விரிவுபடுத்த அறக்கட்டளை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

 
நீண்ட ஆண்டுகளாக பிரச்சினையில் இருந்து வந்த அயோத்தி விவகாரம் முற்று பெற்று ராம ஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் கோலகலமாய் சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கின. இந்நிலையில் கோயில் கட்டுவதற்காக பல தரப்பினர் நன்கொடை அளித்து வருகின்றனர்.   
 
இதைத்தவிர்த்து, கடந்த 44 நாட்களாக நடந்த நன்கொடை திரட்டும் இயக்கத்தின் கீழ் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரூ.2100 கோடிக்கும் அதிகமான நிதி திரண்டதாக கோவில் அறக்கட்டளை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், கோவிலின் பரப்பளவை 70 ஏக்கரில் இருந்து 107 ஏக்கராக விரிவுபடுத்த அறக்கட்டளை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
 
அதன்படி, கோவில் அருகே உள்ள 7,285 சதுர அடி நிலம் ரூ.1 கோடி வாங்கப்பட்டுள்ளது. 107 ஏக்கருக்கு கோவிலை விரிவுபடுத்த இன்னும் 14,30,195 சதுர அடி நிலம் வாங்க வேண்டி உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.