வியாழன், 11 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 1 மார்ச் 2021 (13:02 IST)

பாமகவுக்கு ஒரு மரியாதை எங்களுக்கு ஒரு மரியாதை: தேமுதிக அதிருப்தி!

பாமகவுக்கு ஒரு மரியாதை எங்களுக்கு ஒரு மரியாதை: தேமுதிக அதிருப்தி!
தொகுதிப்பங்கீடு குறித்து அதிமுக உரிய முக்கியத்துவம் தரவில்லை என தேமுதிக அதிருப்தி. 

 
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளன. அனைத்து கட்சிகளும் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு பெறுதல் கலந்தாலோசனை உள்ளிட்டவற்றை நடத்தி வருகின்றன. குறிப்பாக அதிமுக தனது கூட்டணி கட்சிகள் குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 
 
இந்நிலையில், தொகுதிப்பங்கீடு குறித்து அதிமுகவுடன் ஆலோசிக்கவிருந்த நிலையில் உரிய முக்கியத்துவம் தரவில்லை என தேமுதிக அதிருப்தி தெரிவித்துள்ளது. அமைச்சர் தங்கமணியுடனான பேச்சுவார்த்தையை தேமுதிக நிர்வாகிகள் தவிர்த்தனர். பாமகவுக்கு கொடுக்கும் முக்கியத்தவத்தை தங்களுக்கு தரவில்லை என தேமுதிக நிர்வாகிகள் கூறி அதிருப்தி தெரிவித்துள்ளனர்.