வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 3 மார்ச் 2021 (10:28 IST)

இந்த முறை இலவச அறிவிப்பு உண்டா? – திமுகவின் தேர்தல் அறிக்கை விரைவில்..!

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் முதலாகவே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டிருந்தது.

இந்நிலையில் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள், சலுகைகள், நலத்திட்டங்களை விளக்கும் தேர்தல் அறிக்கை மார்ச் 11ல் வெளியாக உள்ளது. முந்தைய தேர்தல்களில் இலவச பொருட்கள் அறிவிக்கப்பட்டது போல இந்த தேர்தலில் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.