செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 29 ஜனவரி 2021 (12:55 IST)

நான் ராமதாஸ் ஆளு.. இட ஒதுக்கீடு குடுங்க! – ஆட்சியர் அலுவலகம் முன்பு குவிந்த பாமக!

கோயம்புத்தூரில் பாமகவினர் ‘நான் ராமதாஸ் ஆளு” என்ற பலகைகளை பிடித்தபடி போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாமக வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க கோரி போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர். இதனால் பாமக – அதிமுக கூட்டணி நிலைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு பாமகவினர் இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த போராட்டத்தில் பலர் “நான் ராமதாஸ் ஆளு” என குறிப்பிடப்பட்ட பலகைகளை ஏந்தியபடி போராடியுள்ளது வைரலாகி வருகிறது.