அடியாட்கள் அடித்தனர்... சிகிச்சை பெறும் போலீஸார் வாக்குமூலம்?
காயமடைந்த காவலர்களிடம் விசாரித்ததில், தங்களை தாக்கியது அடியாட்கள் தான் என்று கூறியதாக தகவல்.
புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநில விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. இருப்பினும் இந்த போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் விவசாயிகள் நடத்திய பேரணியில் வன்முறை எழுந்ததை அடுத்து ஒரு சில சங்கங்கள் போராட்டத்தில் இருந்து விலகிக் கொண்டன. இருப்பினும் இன்னும் ஒரு சில சங்கங்கள் போராட்டத்தை நீடித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வன்முறையில் கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட்ட போலீசார் இந்த கலவரத்தில் காயம்பட்டுள்ளனர். இதில் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே காயமடைந்த காவலர்களிடம் விசாரித்ததில், தங்களை தாக்கியது அடியாட்கள் தான் என்றும், விவசாயிகள் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.