போராடும் விவசாயிகளை நள்ளிரவில் அகற்ற முயற்சி: டெல்லியில் பதற்றம்!
புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநில விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. இருப்பினும் இந்த போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
இந்த நிலையில் சமீபத்தில் விவசாயிகள் நடத்திய பேரணியில் வன்முறை எழுந்ததை அடுத்து ஒரு சில சங்கங்கள் போராட்டத்தில் இருந்து விலகிக் கொண்டன. இருப்பினும் இன்னும் ஒரு சில சங்கங்கள் போராட்டத்தை நீடித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் டெல்லியில் போராட்டத்தை தொடரும் விவசாயிகளை நள்ளிரவில் திடீரென அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டதாக பதட்டம் ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் விவசாயிகள் போராட்டம் நீடிக்கும் என்று விவசாயிகள் பிடிவாதமாக இருப்பதால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் நீடித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது