1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. PMK nagarajan murder in chengalpat

பாமக நிர்வாகி கொலை, துப்பாக்கியால் சுட்டு கொலையாளியை பிடித்த போலீஸ்.. செங்கல்பட்டில் பரபரப்பு..!

பாமக
செங்கல்பட்டில் பாமக நிர்வாகி ஒருவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து அவரை கொலை செய்தவரை போலீசால் காலில் துப்பாக்கி சுட்டு விட்டு பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த பாமக நிர்வாகி நாகராஜன் என்பவர் நேற்று கொலை செய்யப்பட்டார். நாகராஜனை கொலை செய்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் அஜய் என்ற 23 வயது வாலிபர் தப்பிக்க முடிந்தபோது காவல்துறையினர் அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.. 
 
போலீசாரை அஜய் கத்தியால் தாக்க முயன்றதாகவும் இதனால் தற்காப்புக்காக அவரது இடது காலில் போலீசார் சுட்டு அவரை பிடித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
போலீசார் துப்பாக்கியால் சுட்டதால் காயம் அடைந்த அஜய் தற்போது காஞ்சிபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் சிகிச்சைக்கு பின்னர் அவரிடம் பாமக நிர்வாகியின் நாகராஜன் கொலை குறித்து விசாரணை செய்ய போலீஸ் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
தென்மாவட்டத்தில் இருந்து வரும் ரயில்கள் விழுப்புரத்தில் திடீர் நிறுத்தம்: பயணிகள் அதிர்ச்சி..!