ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 9 ஜூலை 2023 (12:53 IST)

குழந்தை இல்லை என கேலி, கிண்டல்; 3 முதியவர்களை அடித்து கொன்ற நபர்!

crime
பஞ்சாபில் குழந்தை இல்லாததை கிண்டல் செய்த முதியவர்களை ஆசாமி ஒருவர் அடித்தே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



பஞ்சாப் மாநிலம் லூதியான நகரில் உள்ள நியூ ஜானக்பூரி பகுதியில் வசித்து வருபவர் ராபின் என்ற முன்னா. இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். 42 வயதாகும் முன்னாவிற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. ஆனாலும் இதுவரை குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்துள்ளது.

இதை பக்கத்து வீட்டில் உள்ள சமன் லால் என்ற முதியவரும் அவர் மனைவி சுரீந்தர் கவுரும் அடிக்கடி சொல்லிக் காட்டி கிண்டல் கேலி செய்து வந்துள்ளனர். பலர் முன்னிலையில் அடிக்கடி முன்னாவை இவ்வாறு கிண்டல் செய்து வந்ததால் ஆத்திரமடைந்த முன்னா அவர்களை வீட்டுக்குள் புகுந்து அடித்துக் கொன்றுள்ளார். சமன் லாலின் தயாரான 95 வயது மூதாட்டி ஜீத்து என்பவரையும் அடித்துக் கொன்றுள்ளார்.

பின்னர் கேஸ் அடுப்பை திறந்து விட்டு வீடு தீப்பற்றிக் கொண்டது போல ஜோடிக்க முயற்சிகள் செய்துள்ளார். ஆனால் சமன் லால் வீட்டில் இருந்த ரேடியோ உள்ளிட்ட சில பொருட்களை முன்னா திருடி வைத்திருந்ததால் அதன் மூலம் போலீஸில் பிடிபட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K