வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 8 ஜூலை 2023 (13:44 IST)

கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலையில் புதிய தகவல்..!

கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை தொடர்பாக புதிய தகவல் வெளியாகி உள்ளது
 
தற்கொலைக்கு முதல் நாள் இரவு பாதுகாவலரிடம் துப்பாக்கி குறித்து விஜயகுமார் விசாரித்துள்ளார்  என்று மேற்கு மண்டல ஐ.ஜி, எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகளிடம் கடந்த ஒருவாரமாக டிஐஜி பேசியுள்ளதாகவும், அப்போது தனக்கு உள்ள பிரச்சினை குறித்து அதிகாரிகளிடம் டிஐஜி விஜயகுமார் எடுத்துரைத்துள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.
 
மேலும் காவல்துறையில் இல்லாத நண்பர்களிடம் பேசிய டிஐஜி தற்கொலை சிந்தனை வந்து செல்வதாக கூறியுள்ளார். அண்மை காலமாக மருத்துவர்களை மாற்றியும், மருந்துகளையும் மாற்றி மாற்றி எடுத்ததாக தகவல் தெரிய வந்துள்ளது.
 
மேலும் மகளின் படிப்புற்கு எல்லாம் ரெடி செய்துவிட்டதாக சக அகிகாரிகளிடம் முன்னரே டிஐஜி விஜயகுமார் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran