1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 8 ஜூலை 2023 (12:50 IST)

இலவச பஸ் பயணத்திற்காக பெண் வேடம்.. இளைஞரை மடக்கி பிடித்த போலீஸ்..!

இலவச பேருந்து பயணத்திற்காக புர்கா அணிந்து பெண் வேடமிட்ட இளைஞரை சுற்றி வளைத்து காவல் துறையினர் பிடித்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது என்பதும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தது என்பது தெரிந்ததே. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் என்ற அறிவிப்பு அமலுக்கு வந்தது என்பதையும் பார்த்தோம்.
 
இந்த நிலையில் பேருந்தில் இலவச பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக இளைஞர் ஒருவர் புர்கா அணிந்து சென்றதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து அந்த பேருந்தை சுற்றி வளைத்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர்
 
அப்போது அவர் பேருந்தில் இலவச பயணம் செல்வதற்காக பெண் வேடமிட்டதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த நபரை எச்சரித்து இனிமேல் இவ்வாறு நடந்து கொள்ள கூடாது என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
 
Edited by Mahendran