திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 18 மார்ச் 2021 (10:47 IST)

கீழ்வேளூரில் பாமக வேட்பாளர் திடீர் மாற்றம்! – ஜி.கே.மணி அறிவிப்பு!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணில் போட்டியிடும் பாமக தனது வேட்பாளரை மாற்றியுள்ளது.

தமிழகம் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது பாமக. அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகள் பாமகவுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான வேட்பாளர்களையும் பாமக அறிவித்திருந்தது. இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒரு தொகுதியில் வேட்பாளரை மாற்றியுள்ளது.

அதன்படி கீழ்வேளூர் தொகுதியில் முன்னதாக முகுந்தன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதற்கு பதிலாக வடிவேல் ராவணன் போட்டியிடுவார் என பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.