புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 18 மார்ச் 2021 (07:03 IST)

நாளையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு: இதுவரை எத்தனை மனுக்கள்?

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்த நிலையில் கடந்த 12ஆம் தேதி முதல் வேட்பு மனுத்தாக்கல் ஆரம்பமானது. இடையில் சனி ஞாயிறு விடுமுறை என்பதால், திங்கட்கிழமை முதல் மீண்டும் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது
 
அதிமுக திமுக உள்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வேட்புமனுவை தாக்கல் செய்து வந்தனர். ஆரம்பத்தில் வேட்புமனுத்தாக்கல் குறைவாக இருந்தாலும் நேற்றும் நேற்று முன்தினமும் மிக அதிகமானவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளையுடன் நிறைவு பெறுகிறது. இதனை அடுத்து இதுவரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் தமிழகம் முழுவதும் ஆர்வத்துடன் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் சுயேட்சை என்பது குறிப்பிடத்தக்கது 
 
நாளையுடன் வேட்புமனுதாக்கல் முடிவடைவதால் இன்றும் நாளையும் மிக அதிக அளவில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மாலை 3 மணிக்கு வேட்புமனுத்தாக்கல் முடிந்தவுடன் நாளை மாலை வேட்பாளர் இறுதிப்பட்டியலை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது