திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 18 மார்ச் 2021 (09:45 IST)

மநீம பொருளாளர் வீட்டில் ஐடி ரெய்டு! – கணக்கில் வராத 8 கோடி பறிமுதல்!

மக்கள் நீதி மய்யத்தின் பொருளாளர் சந்திரசேகர் வீட்டில் நடந்த ஐடி ரெய்டில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளரும், தொழிலதிபருமான சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருப்பூரில் உள்ள சந்திரசேகர் வீடு, அலுவலகம், உறவினர்கள் வீடு ஆகியவற்றில் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூ.8 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. தேர்தல் சமயத்தில் நடந்த இந்த சோதனை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.