1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. plus two student commited sucide

12ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் - திருப்பூரில் மாணவி தற்கொலை!...

student
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பிளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் இரண்டாம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை மாநில முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதினார்கள். இந்நிலையில்தான், நேற்று காலை 9.30 மணி அளவில் தேர்வு முடிவுகள் வெளியானது

வழக்கம்போல் இந்த முறையும் மாணவிகளே அதிக சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியம் பெருந்தொழுவு அருகே சாணார்பாளையம் என்கிற பகுதியில் வசிக்கும் வேளாங்கண்ணி என்பவரின் மகள் ஜென்சிகா(17) பெருந்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று தேர்வு முடிவுகள் வெளியான போது அவர் 600 க்கு 397 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தர்.  இது குறைவான மதிப்பெண் என அவர் பெற்றோர்களிடம், தோழிகளிடமும் சொல்லி புழம்பியதாக தெரிகிறது. இதையடுத்து வீட்டில் யாருமில்லாத நிலையில் நேற்று காலை அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.. அவரை உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.. அவிநாசி பாளையம் போலீசார் இதுபற்றி விசாரணை செய்து வருகிறார்கள்.
அடுத்த கட்டுரையில்
நாளையுடன் முடிவடையும் சட்டமன்றத்தின் ஆயுட்காலம்.. கவர்னர் கையில் 4 வழிகள்..!