பணம் கொடுக்கலான காலி!.. மிரட்டிய சாமியார்!.. கல்லூரி மாணவி தற்கொலை!..
உலகமெங்கும் பல ஆயிரம் போலி சாமியார்கள் இருக்கிறார்கள். மதம், கடவுள் நம்பிக்கை மற்றும் மூட நம்பிக்கை உள்ளவர்களை குறிவைத்து அவர்கள் பணம் கறந்து சுக போகமாக வாழ்ந்து வருகிறார்கள். தங்களை கடவுள்களின் அவதார புருஷர்கள் போல் காட்டிக்கொண்டு பொதுமக்களிடம் பணம் வசூலித்து கார், பங்களா என சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள்.
குடும்ப பிரச்சனை, வியாபர ரீதியிலான பிரச்சனை, கடன் பிரச்சனை, மன உளைச்சல், வேலை தொடர்பான பிரச்சனை என பல பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதற்காக பலரும் சாமியார்களை அணுகுகிறார்கள். அதை பயன்படுத்தி பல போலி சாமியார்கள் பணம் பறித்து வருகிறார்கள். சிலர் பெண்களிடம் பாலியல் சீண்டலிலும், பலாத்கார செயலிலும் ஈடுபடுவதுண்டு.
இப்போது எல்லோரின் கையில் செல்போன் வந்துவிட்டதால் ஆன்லைன் மூலம் கூட சாமியார்கள் பணம் சம்பாதிக்கிறார்கள்.இந்நிலையில்தான், தனிப்பட்ட பிரச்சனைகாக இன்ஸ்டாகிராம் வழியாக ஒரு சாமியாரை அணுகிய மத்திய பிரதேசத்தை சேர்ந்த இசைக்கல்லூரி மாணவி ரேணுகா(25) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தனது மனக்குறையை சாமியார் போக்குவார் என நம்பி அந்த பெண் அவரை அணுகியிருக்கிறார். அந்த போலி சாமியோரோ அவரிடமிருந்து பணம் பறிக்க துவங்கியிருக்கிறார். ஆன்லைன் மூலம் சாமியாருக்கு ரூ.74,400-ஐ ரேணுகா அனுப்பியிருக்கிறார். ஆனால், அதுபோதாது. மேலும் அனுப்பவேண்டும் என கேட்ட அந்த சாமியார் பணம் கொடுக்காவிட்டால் உனக்கும், உன் பெற்றோருக்கும் தீங்கு நேரிடும் என மிரட்டியதால் ரேணுகா அந்த முடிவை எடுத்திருக்கிறார். அடையாளம் தெரியாத போலி சாமியார் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.