1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Class 10 Student Dies by Suicide Following Questioning Over AI Tool Usage

10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை.. AI தொழில்நுட்பம் காரணமா?

உத்தரப் பிரதேசம் மாணவி தற்கொலை
உத்தர பிரதேச மாநில பள்ளித் தேர்வில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காப்பி அடித்ததாக கூறி விசாரணை நடத்தப்பட்டதை தொடர்ந்து, 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த டிசம்பர் 23 அன்று நடந்த இச்சம்பவத்தில், திருப்புதல் தேர்வின் போது மாணவி மொபைல் போன் பயன்படுத்தியதாக கண்டறியப்பட்டு, ஆசிரியர்கள் மற்றும் முதல்வரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
 
பள்ளியில் விசாரணை முடிந்த சிறிது நேரத்திலேயே மாணவி தற்கொலை செய்துகொண்டார். மாணவியின் தந்தை அளித்த புகாரில், பள்ளி ஆசிரியர்களும் முதல்வரும் மற்றவர்கள் முன்னிலையில் தனது மகளை கடுமையாக அவமானப்படுத்தி, மன உளைச்சலுக்கு ஆளாக்கியதே தற்கொலைக்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். இது தற்கொலைக்கு தூண்டிய செயல் என்று அவர் புகார் அளித்துள்ளார்.
 
பள்ளி நிர்வாகம் இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. சிபிஎஸ்இ விதிமுறைப்படி போனை பறிமுதல் செய்து முறைப்படி கண்டித்ததாக முதல்வர் தெரிவித்துள்ளார். தற்போது போலீஸார் பள்ளியின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, தற்கொலைக்கு தூண்டியதற்கான சான்றுகள் உள்ளனவா என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு: திரைமறைவில் நடக்கும் சீட் கணக்குகள்!