1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Plus-2 student committed suicide because she was forced to marry

திருமணம் செய்ய வற்புறுத்தியதால் பிளஸ்-2 மாணவி தூக்கிட்டு தற்கொலை

மாணவி
சீர்காழி பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவியை திருமணம் செய்ய வற்புறுத்தியதால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழி அடுத்த இளந்தோப்பைச் சேர்ந்தவர் மீனாட்சி. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். விஜய் என்பவர் மாணவி மீனாட்சியை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதோடு அவரை அடித்துள்ளார். இதனால் மாணவி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
ஜெ. வீடியோ விவகாரம் ; கடும் கோபத்தில் சசிகலா : தினகரனை சந்திக்க மறுப்பு?