1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 19 டிசம்பர் 2017 (12:51 IST)

அரசு பள்ளியில் சமையல் செய்யும் மாணவிகள்

ஆக்ராவில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மாணவிகள் மதிய உணவு சமைத்துள்ளனர். இது பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவர்களை வேலை செய்ய சொல்லி துன்புறுத்தும் சம்பவம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. சில ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளை வகுப்பறையை சுத்தம் செய்ய சொல்வது, கழிவறையை சுத்தம் செய்ய நிர்பந்தப்படுத்துவது போன்ற செயல்களை செய்து வருகிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக ஆக்ராவில் உள்ள ரன்காட்டா அரசு தொடக்கப்பள்ளியில் 150 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் மதிய உணவு சமைக்க ஒரு பெண் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சமைக்கும் போது பள்ளியில் பயிலும் ஒரு மாணவி காய் வெட்டுகிறார் மற்றொருவர் சப்பாத்தி உருட்டுகிறார். இதனை வீடியோ எடுத்த நபர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தார். அதனை பார்த்த தொடக்க கல்வி மாணவர்களை சமைக்க வைத்தது தவறென்றும் இது குறித்த விசாரணைக்கு பிறகு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
பெற்றோர்கள், தங்களைப்போல் குழந்தைகள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காகத் தான் பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள். ஆனால் பள்ளியிலோ பிள்ளைகளை சில ஆசிரியர்கள் சித்ரவதை செய்து வருகிறார்கள். இதுபோல் செய்யும் ஆசிரியர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பெற்றோர்கள் ஆதங்கத்துடன் தங்களின் கோபத்தை வெளிபடுத்துகின்றனர்.