திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 22 டிசம்பர் 2017 (15:37 IST)

முதலிரவன்று தங்கையை நண்பர்களுடன் கூட்டு பலாத்காரம் செய்த சகோதரர்...

உத்திரபிரதேச மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இஸ்லாமிய இளம்பெண் ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு நல்ல முறையில் திருமணம் நடைபெற்றது. ஆனால், இதன் பின்னர்தான் துயரம் அரங்கேறியுள்ளது.
 
திருமணநாள் இரவன்று மணப்பெண்ணின் சகோதரர் தனது நண்பர்களுடன் வந்து அவரை கூட்டு பலாத்காரம் செய்துள்ளார். இதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். பின்னர், அந்த வீடியோவை காட்டி இந்த சம்பத்தை யாரிடமும் சொல்லக்கூடாது எனவும் மீறி கூறினால் கொன்றுவிடுவேன் என கூறியும் மிரட்டியுள்ளார்.
 
ஆனால், மணப்பெண்ணோ இது குறித்து தன் கணவரிடம் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த கணவர் மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து வழங்கியுள்ளார். இது குறித்து பெண்ணின் தந்தை போலீஸில் புகார் அளிக்க சகோதர் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.