1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Petrol prices in 31 districts

பெட்ரோல் விலை 31 மாவட்டங்களில் சதம் !

பெட்ரோல் விலை
தமிழகத்தில் 31 மாவட்டங்களில்  பெட்ரோல் விலை ரூ.100 தொட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வரலாற்றில் இதுவரை காணாத வகையில் கடந்த சில வாரங்களாக இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை ரூ.100 ஐ நெருங்கிவருகிறது. இதுகுறித்து சமீபத்தில் டுவீட் பதிவிட்ட முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், இந்திய வீரர்கள் டெஸ்ட்-ல் சதம் அடிக்கவில்லை. பெட்ரோல் சதம் அடித்துள்ளது என்றார்,

அதன்படி, இன்று  தமிழகத்தில் சென்னையைத் தவிர 31 மாவட்டங்களில் ரூ.100 ஐ தொட்டு சதம் அடித்துள்ளது. கள்ளக்குறிச்சியில் ரூ.101.50  க்கும், மதுரை, சேலம், அரியலூர், திண்டுக்கல், தருமபுரி, தஞ்சாவூர், உள்ளிட்ட 31  மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100 என்ற சதம் அடித்துள்ளது சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 99.49 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
கொரோனா 3 வது அலையை எதிர்கொள்ள..... மருத்துவர்கள் அறிவுரை