1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 27 ஜூன் 2021 (06:53 IST)

செஞ்சுரி அடிக்க இன்னும் 51 காசுகள் தான்: சென்னையில் பெட்ரோல் விலை

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருப்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக 5 மாநில தேர்தலுக்கு பின்னர் கிட்டத்தட்ட தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருகிறது. ஏற்கனவே தமிழகத்தில் 21 நகரங்களில் ஏற்கனவே பெட்ரோல் விலை செஞ்சுரி அடித்து விட்டது. சென்னையில் பெட்ரோல் விலை செஞ்சுரியை நெருங்கிவிட்டது என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்ததை அடுத்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 99.49 விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் செஞ்சுரி அடிக்க இன்னும் 51 காசுகள் தான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் சென்னையில் டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு 23 காசுகள் உயர்ந்து அடுத்து 93.46 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருவது பொதுமக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.