திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 20 ஜூன் 2021 (11:46 IST)

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வாய்ப்பில்லை! – தமிழக நிதியமைச்சர்!

தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூ.100ஐ எட்டிவிட்ட நிலையில் விலை குறைக்க சாத்தியமில்லை என தமிழக நிதியமைச்சர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கடந்த சில மாதங்களில் வேகமாக உயரத் தொடங்கிய நிலையில் பல மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100ஐ எட்டியுள்ளது. இந்நிலையில் தற்போது தமிழகத்திலும் பெட்ரோல் விலை ரூ.100ஐ எட்டியுள்ள நிலையில் விலையை குறைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் பெட்ரோல் விலை குறைப்பு குறித்து பேசியுள்ள தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் “பெட்ரோலிய பொருட்களால் தமிழகத்திற்கு குறைவான அளவிலேயே வரி கிடைக்கிறது. பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு மூன்று மடங்கு உயர்த்தியுள்ளது. ஆனால் மாநிலங்களுக்கு பங்கு கொடுக்காமல் அதிகமான வரியை மத்திய அரசே எடுத்துக் கொள்கிறது. அதனால் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது சாத்தியமில்லாததாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.