ஆட்சிக்கே வரல.. அதுக்குள்ள அலப்பறையே!.. தவெக மீது புகார் சொல்லும் பனையூர் வாசிகள்!...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகம் சென்னை கிழக்கு கடற்கரையில் உள்ள பனையூரில் அமைந்திருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தவெக தனது தேர்தல் பணிகளை வேகப்படுத்தியிருக்கிறது.. தவெக சார்பில் இன்று விருப்பமனு விநியோகம் தொடங்கிய நிலையில் பனையூரில் உள்ள தாவெக அலுவலகத்தில் ஒரே நேரத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்ப மனு பெறுவதற்கு வாங்குவதற்காக குவிந்திருக்கிறார்கள்..
இதனால்அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் கோபமடைந்த அந்த பகுதி மக்கள் தவெக அலுவலகத்தின் முன்பு திரண்டு புகார் சொல்ல துவங்கி விட்டனர். வீட்டுக்கு வெளியே வர முடியவில்லை, வீட்டிற்குள் செல்ல முடியவில்லை.. எங்கும் வெளியே செல்ல முடியவில்லை,. ரோட் முழுவதுமாக பேரிகார்ட் போட்டு வைத்திருக்கிறார்கள். எங்கள் கார்களை நிறுத்த முடியவில்லை.
இவர்களுக்கு பேரிகார்ட் இங்கே போடுவதற்கு அனுமதி கொடுக்கவில்லை.. ஆனால் போட்டு வைத்திருக்கிறார்கள்.. இவர்கள் என்னும் ஆட்சிக்கே வரவில்லை.. இப்போதே மிகவும் மோசமாக நடந்து கொள்கிறார்கள். கேட்டால் எங்களிடம் சண்டைக்கு வருகிறார்கள்.. போலீசார் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்..
எப்போது இங்கே தவெக அலுவலகம் வந்ததோ அப்போது முதலே நாங்கள் இந்த பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம்.. இதற்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..