ஞாயிறு, 15 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By BALA
Last Modified: வெள்ளி, 6 பிப்ரவரி 2026 (11:20 IST)

வரிமான வரித்துறை அபராதம்!.. இமேஜை கொடுத்துக்கொண்ட விஜய்!. இனிமே வச்சு செய்வாங்களே!..

vijay
நடிகர் விஜய் அரசியல் கட்சியை தூங்கி அரசியல்வாதியாக மாறியிருக்கிறார்.. மேலும் அதிமுக, திமுக போன்ற கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.. திமுகவை தீய சக்தி என்றும், அதிமுகவை ஊழல் கட்சி என்றும் பேசி வருகிறார்.. அதேபோல் நான் ஊழல் செய்ய மாட்டேன், அந்த அவசியமும் எனக்கில்லை.. எனக்கு அந்த தேவையும் இல்லை என்று சில நாட்களுக்கு முன்பு ஒரு மேடையில் பேசினார்..

அதாவது ஊழல் இல்லாத ஆட்சியை அமைப்பேன் என்கிற ரீதியில் பல கருத்துகளையும் விஜய் பேசினார்.. இந்நிலையில்தான் புலி படம் தொடர்பான வருமானவரித்துறை விதித்த அபராதம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு விஜய்க்கு நெகட்டிவாக அமைந்திருக்கிறது. 2015ல் வெளியான புலி திரைப்படத்தில் விஜய் வாங்கிய சம்பளத்தில் 15 கோடியை கணக்கில் காட்டவில்லை என கண்டுபிடித்த வருமானவரித்துறை விஜய்க்கு 1.50 கோடி அபராதம் விதித்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்தார்..

அபராதத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் விதிக்கவில்லை.. விதிமுறையை மீறி படம் வெளியாகி ஏழு வருடங்கள் கழித்து அபராதம் விதித்துள்ளனர். எனவே அதை தள்ளுபடி செய்ய வேண்டும் என விஜய் தரப்பு கூறியிருந்தது.. ஆனால் இதை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இன்று வெளியான தீர்ப்பில் அமலாக்கத்துறை விஜய்க்கு விதித்த அபராதம் செல்லும் எனவும் நீதிமன்றம் அறிவித்துவிட்டது. விஜய் நடிகராக இருந்தவரை இது பிரச்சனை இல்லை.. ஆனால் தற்போது அவர் ஊழலுக்கு எதிராக பேசி வருகிறார்..

தற்போது இந்த தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகள் இதையே விஜய்க்கு எதிரான  ஆயுதமாக பயன்படுத்துவார்கள்.. ‘வருமானத்தை மறைத்து அபராதம் வாங்கிய விஜய் ஊழலை பற்றி பேசலாமா?’ என்று கண்டிப்பாக பேசுவார்கள்.. இதையடுத்து, விஜய் வழக்கு தொடராமலே இருந்திருக்கலாம்.. அவர் இமேஜை கெடுத்துக் கொண்டார்’ என அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.