தொடர்புடைய செய்திகள்
- 6 மாதமாக பரிவர்த்தனை இல்லாவிட்டால் பென்ஷன் கேன்சல்??
- கட்டணம் இன்றி வங்கிக் கணக்கு தொடக்கம்! அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு புதிய திட்டம்!
- கொரோனா வைரஸை அடுத்து ஸ்மார்ட்போன் வைரஸ்: அதிர்ச்சி தகவல்
- அடுத்த 3 மாதங்களுக்கு இலவச சமையல் சிலிண்டர்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு
- வீடுதேடி வரும் முதியோர் உதவித்தொகை: முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு
பதறிப்போன பென்ஷன் பார்ட்டிஸ்... விளக்கம் கொடுத்த கருவூலத்துறை!
பணப்பரிவர்த்தனை இல்லாத ஓய்வூதிய வங்கிக்கணக்குகளை முடக்க உத்தரவிடவில்லை என தமிழ்நாடு கருவூலத்துறை தகவல்.
ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு அவா்களது வங்கிக் கணக்குகளில் ஓய்வூதியம் வரவு வைக்கப்பட்டு வருவதாகவும், இந்த வங்கிக் கணக்கில் இருந்து கடந்த ஆறு மாதங்களாக பணப் பரிவா்த்தனைகள் நடைபெறாவிட்டால், அதுகுறித்த தகவலை சம்பந்தப்பட்ட வங்கியானது, கருவூலத் துறைக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியானது.
ஆனால் இது போலியான தகவல் என தமிழ்நாடு கருவூலத்துறை ஆணையர் சமயமூர்த்தி தகவல் வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, 6 மாத காலம் பணப்பரிவர்த்தனை இல்லாத ஓய்வூதிய வங்கிக்கணக்குகளை முடக்க உத்தரவிடவில்லை. 6 மாத கால பணப்பரிவர்த்தனை இல்லாத வங்கி கணக்குகள் பற்றி கணக்கெடுக்க மட்டுமே அறிவுறுத்தப்பட்டது.
பணப்பரிவர்த்தனை செய்யாத ஓய்வூதியதாரர்களை கணக்கெடுத்த பின்னர் அதற்கான காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என விளக்கமளித்துள்ளார்.
