புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (17:26 IST)

6 மாதமாக பரிவர்த்தனை இல்லாவிட்டால் பென்ஷன் கேன்சல்??

ஓய்வூதிய வங்கி கணக்கில் ஆறு மாதங்களாக பணப் பரிவா்த்தனைகள் நடைபெறாவிட்டால் தகவல் கொடுக்க கருவூலத் துறை உத்தரவு. 
 
ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு அவா்களது வங்கிக் கணக்குகளில் ஓய்வூதியம் வரவு வைக்கப்பட்டு வருவதாகவும், இந்த வங்கிக் கணக்கில் இருந்து கடந்த ஆறு மாதங்களாக பணப் பரிவா்த்தனைகள் நடைபெறாவிட்டால், அதுகுறித்த தகவலை சம்பந்தப்பட்ட வங்கியானது, கருவூலத் துறைக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், ஓய்வூதியதாரா்கள் தங்களது வாழ்வுச் சான்றிதழ் அளிக்கவோ அல்லது கணக்கு குறித்த விவரங்களை ஆய்வு செய்வதற்கு வசதியாகவோ ஓய்வூதியம் வழங்குவது நிறுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.