1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Bank account creating for unorganized employees started in all post offices

கட்டணம் இன்றி வங்கிக் கணக்கு தொடக்கம்! அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு புதிய திட்டம்!

வங்கிக் கணக்கு
சென்னையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கட்டணம் இன்றி வங்கிக் கணக்கு தொடங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகள் அளிப்பதில் எழுந்த சிக்கலை தீர்க்கும் பொருட்டு சென்னை வடக்கு கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அஞ்சலகங்களிலும், கட்டணம் இன்றி வங்கிக் கணக்கு திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

'இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ்' வங்கி மூலம், கட்டணம் இன்றி கணக்கு துவங்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இந்த வங்கிக் கணக்கில் தொழிலாளர் நலத்துறை சார்பாக வழங்கப்படும், நிதியுதவி ஏற்றப்பட தொழிலாளர்கள், தபால்காரர் மூலம் வீட்டுலிருந்தே பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த வங்கிக் கணக்கைத் துவங்க, தொழிலாளர் தங்களின் உறுப்பினர் அட்டை, ஆதார் அட்டை, மொபைல் எண்களை தபால்காரரிடம் கொடுத்து, கணக்கு துவங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது,
அடுத்த கட்டுரையில்
கொரோனா வைரஸை அடுத்து ஸ்மார்ட்போன் வைரஸ்: அதிர்ச்சி தகவல்