திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 17 செப்டம்பர் 2022 (09:42 IST)

கட்சி தாவிய பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்!!

தாய்க் கழகத்தில் மீண்டும் இணைந்த பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர். 


திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட T கல்விப்பட்டி  பகுதியில் இடைக்கால பொதுச் செயலாளர் ஆணைக்கிணங்க சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் அவர்கள் தலைமையில் மாபெரும் எழுச்சிமிகு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பன்னீர் செல்வத்தின் அணியை சேர்ந்த உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏழுமலை பேரூராட்சி கழகச் செயலாளர் வாசிமலை மற்றும் உசிலம்பட்டி நகர் கழக ஒன்பதாவது வார்டு கவுன்சிலரான தேவசேனா மற்றும்  உசிலம்பட்டி நகரக் கழக துணைச் செயலாளர் கே எஸ் லட்சம் ஆகியோர் இன்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் அவர்கள் தலைமையில் மீண்டும் தங்களை தாய்க்கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.