திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 17 செப்டம்பர் 2022 (08:24 IST)

119வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை!

இன்று 119வது நாளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை.


சென்னையில் கடந்த 118 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று 119வது நாளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது பொது மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மற்ற பொருள்களின் விலைகள் உயர்ந்து கொண்டிருந்தாலும் கடந்த நான்கு மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருப்பது பொதுமக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. 

இருப்பினும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்ததை அடுத்து பெட்ரோல்-டீசல் விலையை மேலும் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.