திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (15:47 IST)

அமமுக.,வின் தொழிற்சங்க பேரவையின் கொடியை அறிமுகம் செய்த டிடிவி.தினகரன்

ttv dinakaran
அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட நிலையில்  சசிகலா ஆதரவாளரான டிடிவி. தினகரன் சில ஆண்டுகளுக்கு முன் அமமுக என்ற கட்சியைத் தொடங்கினார்.

இக்கட்சியில் இணைந்திருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் அக்கட்சியில் இருந்தது விலகித் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளில் இணைந்தனர்.

இருப்பினும், அமமுக கட்சியில் தினகரனின் ஆதரவாளர்கள் தொடர்ந்து செயலாற்றி வருகின்றனர். அக்கட்சியின் பொதுச்செயலாளர்  டிவிடி தினகரன்   தலைமையில் அமமுக சார்பில் நேற்று, திருப்பூரில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்ததது.


இந்த விழாவில் அக்கட்சியைச் சேர்ந்த திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதில்  அமமுகவின் தொழிற்சங்கப் பேரவையின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து டிடிவி தினகரன் தன் டுவிட்டர்  பக்கத்தில், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில் கழகத்தின் தொழிற்சங்க அமைப்பான இதயதெய்வம் அம்மா தொழிற்சங்க பேரவையின் கொடி, தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில்  இன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.