வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (12:45 IST)

நாங்க ஆட்சிக்கு வரும்போது நல்லா மாட்டுவீங்க..! – அரசு அதிகாரிகளுக்கு விஜயபாஸ்கர் வார்னிங்!

சமீபத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்த நிலையில் இன்றைய ஆர்பாட்டத்தில் எச்சரிக்கும் விதமாக பேசியுள்ளார்.

கடந்த சில காலமாக அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சரான சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடந்தது.

மேலும் சி.விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது விதிமுறைகளை மீறி மருத்துவக் கல்லூரி கட்ட அனுமதித்ததாக வழக்கும் உள்ளது.


இந்நிலையில் இன்று தமிழக அரசு மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளதை கண்டித்து அதிமுக சார்பில் மாநிலம் தழுவிய ஆர்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் புதுக்கோட்டையில் நடந்த ஆர்பாட்டத்தில் சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் “தற்போது ஆட்சியில் உள்ள திமுகவுக்கு ஆதரவாக பலர் செயல்படுகின்றனர். அரசு அதிகாரிகள், காவல்துறையினர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டால் நாளை ஆட்சி மாற்றம் ஏற்படும்போது வசமாக மாட்டிக் கொள்வீர்கள். பிரச்சினை எங்களுக்கு இல்லை, உங்களுக்குதான்” என்று பேசியுள்ளார்.