தொடர்புடைய செய்திகள்
- மத்திய பட்ஜெட்டில் ஸ்மார்ட்போன் வரி உயர்வு? – விலை உயரும் ஸ்மார்ட்போன்கள்!
- ஆகஸ்ட் 15. சுதந்திரதின விழா: பொதுமக்கள் பங்கேற்க அனுமதி இல்லை!
- 27வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை: பொதுமக்கள் நிம்மதி!
- இன்று தமிழக பட்ஜெட்: முதல்முறையாக இ-பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர்!
- மண் திருட்டில் ஈடுபட்ட 4 டிப்பர் லாரிகளும், பறிமுதல்
வரி உயர்வு என்று யாராவது கனவு கண்டால் நான் பொறுப்பல்ல - பழனிவேல்ராஜன்!
இன்றோ, நாளையோ வரி உயர்வு இருக்கும் என்று யாராவது கனவு கண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல என நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் தகவல்.
நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் இன்று தமிழகத்தில் முதல் முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் திமுக ஆட்சியை பிடித்துள்ள நிலையில், முதல் முறையாக தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவி ஏற்று இன்றைய பட்ஜெட்டில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, தமிழக அரசின் நிதி நிலைமை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. இதை தேர்தல் வாக்குறுதியில் இருந்து பின் வாங்குவதற்கு வெளியிடவில்லை.
பொதுவாக வரியை உயர்த்தியே ஆக வேண்டும். எங்கிருந்தோ பணம் வரவில்லை என்பதால்தான் திவால் ஆகிறது. ஆனால் அதற்காக இன்றோ, நாளையோ வரி உயர்வு இருக்கும் என்று யாராவது கனவு கண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல என தெரிவித்துள்ளார்.
