1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

ஆகஸ்ட் 15. சுதந்திரதின விழா: பொதுமக்கள் பங்கேற்க அனுமதி இல்லை!

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தை தமிழக அரசு சிறப்பாக கொண்டாடும் என்றும் அன்றைய தினம் தமிழக முதல்வர் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றுவார் என்பதும் தெரிந்தது 
 
அந்த வகையில் இந்த ஆண்டு தமிழக முதல்வராக பதவி ஏற்றிருக்கும் முக ஸ்டாலின் அவர்கள் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு இருக்கும் அதே நிலையில் பொதுமக்கள் சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது 
 
கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் கூட்டம் சேர்க்க வேண்டாம் என்று தமிழக அரசு கூறிவரும் நிலையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டாம் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
எனவே இந்த ஆண்டு சுதந்திர தின விழா அரசு ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் மத்தியில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது