வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

27வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை: பொதுமக்கள் நிம்மதி!

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வரை தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருந்த நிலையில் தற்போது இருபத்தி ஆறு நாளாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருந்தது 
 
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என சற்றுமுன் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் விலை ரூ.102.49 என்ற விலையிலும், டீசல் விலையை ரூ.94.39 என்ற விலைக்கும் சென்னையில் விற்பனையாகி வருகிறது என்பதும் இன்றும் அதே விலை தான் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை படிப்படியாக வீழ்ச்சி அடைந்து வருவதை அடுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எந்தவித மாற்றமும் இல்லாமல் கிட்டத்தட்ட ஒரு மாதமாக ஒரே விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் கச்சா எண்ணெய் விலை குறைந்தததற்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும் பெட்ரோல் டீசலுக்கான மத்திய மாநில அரசுகளின் வரியை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை கலந்து வருகின்றன