1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (00:11 IST)

மண் திருட்டில் ஈடுபட்ட 4 டிப்பர் லாரிகளும், பறிமுதல்

கரூர் அருகே மண் திருட்டில் ஈடுபட்ட 4 டிப்பர் லாரிகளும், 2 ஜே.சி.பி இயந்திரங்களும் பறிமுதல் 
 
கரூர் அருகே தொடரும் கிராவல் செம்மண் திருட்டு சம்பவத்தினை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருச்சி சரக ஐ.ஜி மற்றும் டி.ஐ.ஜி காவல்துறை குழுவினர் 6 வாகனங்களை பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். 
 
கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தோகைமலை பகுதியில் தற்போது சமீப காலமாக ஆர்ச்சம்பட்டி என்கின்ற பகுதியில் தொடர்ந்து இரவு பகல் என்று அரசு அனுமதியின்றி கிராவல் மண் திருட்டு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஐ.ஜி வே.பாலகிருஷ்ணன்  அவர்களின் உத்திரவிற்கிணங்க,  காவல்துறை துணை தலைவர் திருமதி ராதிகா மேற்பார்வையில், ஆங்காங்கே காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவல்துறையினர் கரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் மணல் மற்றும் கிராவல் மண் கடத்தல் சம்பவத்தினை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மதியம், தோகைமலை டூ திருச்சி சாலையில் உள்ள ஆர்ச்சம்பட்டி பகுதியில் ரோந்து பணியிலிருக்கும் போது சட்டவிரோதமாக கிராவல் செம்மண்ணை திருடிய 4 டிப்பர் லாரிகளை கண்காணித்து பிடித்தனர். மேலும், இதற்கு துணையாக இருந்த 2 ஜே.சி.பி களையும் அதிரடியாக பறிமுதல் செய்து, தோகமலை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும், இந்த கிராவல் மண் திருட்டானது சுமார் 3 மாதங்களாக நடைபெற்று வருவதாகவும், அரசு அனுமதியின்றியும், திருட்டுத்தனமாக இது போன்ற கிராவல் செம்மணை கடத்தி பல்வேறு மாவட்டங்களுக்கும், பல்வேறு ஊர்களுக்கும் ரூ 4 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது என்பதனை போலீஸார் உறுதிப்படுத்தி விட்டு சென்றனர். மேலும், இது குறித்து தோகைமலை போலீஸார் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும். இந்த கிராவல் மண் திருட்டினை திமுக மாவட்ட பிரதிநிதி எஸ்.ஆறுமுகம் என்பவரும், திருச்சியை சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவரும் இணைந்து நடத்தி வருவதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் கரூர் மாவட்ட காவல்துறையினரிடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்ட போலீஸார் பறிமுதல் செய்யப்பட்ட 4 டிப்பர் லாரிகளும், 2 ஜே.சி.பி லாரிகளும் தற்போது வரை காவல்நிலையம் முன்பே இருப்பதும், இதுவரை வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.