1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. P Chidambaram says about BJp

வெள்ளையனே வெளியேறு போல் பாஜகவே வெளியேறு இயக்கம்: ப சிதம்பரம்

chidambaram
வெள்ளையனே வெளியேறு என சுதந்திரத்திற்காக போராடிய நிலையில் தற்போது மீண்டும் நாட்டு மக்களின் சுதந்திரத்திற்காக பாஜகவே வெளியேறு என்ற போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் அவர்கள் பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி இன்று தொடங்கிய இந்திய ஒற்றுமை நடைபயண தொடக்க விழாவில் காங்கிரஸ் எம்பி சிதம்பரம் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியபோது சுதந்திரத்தின் போது வெள்ளையனே வெளியேறு என்ற போராட்டம் நடத்தும்போது பலர் கேலி செய்தனர். ஆனால் அந்த போராட்டம் வெற்றி பெற்றது.
 
அதேபோல் வெள்ளையனே வெளியேறு என்று சொன்னது போல் பாஜகவையும் ஆட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் அதற்காக எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து ஒரு இயக்கமாக செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
புலிக்குட்டி விற்பனை செய்வதாக ஆன்லைனில் விளம்பரம் செய்த இளைஞர் கைது