மழை தேங்கிய பள்ளத்தில் விழுந்து சிறுமி பலி! – ஓபிஎஸ் கண்டனம்!
தேனி மாவட்டம் ஓடைப்பட்டியில் குழியில் தவறி விழுந்து சிறுமி இறந்தது குறித்து பேரூராட்சிக்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் ஓடைப்பட்டியில் உள்ள சமத்துவபுரத்தில் உள்ள தாத்தா வீட்டிற்கு சென்ற சிறுமி ஹாசினி இயற்கை உபாதை கழிக்க சென்றபோது அங்கு மழைநீர் நிறைந்திருந்த பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார். அப்பகுதியில் பூங்கா அமைப்பதற்காக நீண்ட நாட்கள் முன்னதாக தோண்டிய குழி மூடப்படாததே இதற்கு காரணம் என பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் சிறுமி ஹாசினி உயிரிழப்புக்கு பேரூராட்சியின் அலட்சியமே காரணம் என ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் சிறுமியின் உயிரிழப்புக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் நஷ்ட ஈடும், அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அளிப்பதுடன், இதுபோன்ற சம்பவங்களி இனி தொடராமல் இருக்கும் வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.