செவ்வாய், 18 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 7 செப்டம்பர் 2022 (17:33 IST)

ராகுல் காந்தி நடைப்பயணத்தில் பங்கேற்காதது ஏன்? சோனியா காந்தி விளக்கம்

sonia gandhi
காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி இன்று தொடங்கிய நடை பயணத்தில் பங்கேஏற்க முடியாதது ஏன் என்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி விளக்கமளித்துள்ளார். 
 
காங்கிரஸ்எம்பி ராகுல் காந்தி இன்று கன்னியாகுமரியிலிருந்து நடை பயணத்தை தொடங்கி உள்ளார். 150 நாட்கள் நடைபெறும் இந்த நடைபயணம் காஷ்மீரில் முடிவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் ஒற்றுமை யாத்திரை வெற்றிபெற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவ பரிசோதனை காரணமாக இந்த யாத்திரை தொடக்க விழாவில் பங்கேற்க இயலவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.