செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 7 செப்டம்பர் 2022 (17:30 IST)

அர்ஜுன் சம்பத் கைது - எச் ராஜா கடும் கண்டனம்!

ஜனநாயகத்திற்கு  விரோதமான முறையில் காவல்துறை ஈடுபட்டுள்ளது கண்டிக்கதக்கது என எச் ராஜா பேட்டி.


காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று கன்னியாகுமரியில் இருந்து தனது ஒற்றுமை என்ற யாத்திரையைத் தொடங்க உள்ளார். இதற்காக கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த யாத்திரையை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிலையில் ராகுல் காந்தியின் யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் சென்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

கோவையில் இருந்து கன்னியாகுமரிக்கு ரயில் சென்ற அர்ஜூன் சம்பத்தை திண்டுக்கல்லில் வைத்து போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இது குறித்து பாஜக முன்னாள் தேசிய செயலாளர்  எச் ராஜா பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஆளுநர் வீட்டுக்கு முன்பாக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கக்கூடிய திட்டத்தை தொடங்கி வைக்க வருகை தந்த பிரதமர் மோடி தமிழகம் வந்தார் அப்போது கோ பேக் மோடி என்று பலூன் பறக்கவிட்டனர்.

எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஜனநாயக உரிமை என்று கூறுபவர்கள், இன்று ராகுல் காந்திக்கு எதிராக அர்ஜுன் சம்பத் கருப்புக்கொடி காட்ட சென்ற போது கைது செய்தது கடனத்திற்குரியது. ஜனநாயகத்திற்கு  விரோதமான முறையில் காவல்துறை ஈடுபட்டுள்ளது கண்டிக்கதக்கது எனக் கூறினார்.