1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Orange alert in tamilnadu for heavy rainfall

11, 12ம் தேதிகளில் தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட்! – எந்தெந்த மாவட்டங்களில்?

Orange Alert
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில் எதிர்வரும் நவம்பர் 11, 12ம் தேதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 29ம் தேதி முதலாக வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகவுள்ள நிலையில் கனமழை தீவிரமடைந்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவித்துள்ளபடி நவம்பர் 11 மற்றும் 12ம் தேதிகளில் கனமழை காரணமாக சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 11ம் தேதி செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 12ம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Edit By Prasanth.K
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
ஆசிரியர் திட்டியதால்...மாடியில் இருந்து கீழே குதித்த மாணவன் !